கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

0 6511

சென்னை பூந்தமல்லியில் பைனான்ஸியரை காதல் வலையில் வீழ்த்தி 550 சவரன் நகைகளை அபேஸ் செய்த மாடல் அழகியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரித்த போலீசார், மாடல் அழகியின் புல்லட் காதலனிடம் இருந்து டுகாட்டி பைக் உள்ளிட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் 100 கிராம் தங்க நகைகளையும் கைப்பற்றி உள்ளனர். கடை கடையாய் அடகு வைத்த காதல் ஜோடிகளின் கலெக்சன் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை பூந்தமல்லியில் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சேகர் என்பவர், தனது வீட்டில் உள்ள 550 சவரன் நகைகளை திருடி விடுதிக் காதலியான மாடல் அழகியிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக மாடல் அழகி சுவாதியுடன் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காக அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

போலீசாரின் விசாரணையில் சுவாதிக்கு பக்க பலமாக இருந்து நகைகளை பறிக்க திட்டம் வகுத்து கொடுத்தது அவரது புல்லட் காதலன் என்பது தெரியவந்தது. அவன் கொடுத்த தைரியத்தில் தான் பைனான்ஸியர் சேகரை கைக்குள் போட்டுக் கொண்டு நகைகளை எடுத்து வரச்சொல்லி அபேஸ் செய்தது தெரியவந்தது.

சேகர் கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி பைக் ஒன்றையும், இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றுவதற்கு புல்லட் பைக் ஒன்றையும் சுவாதி காதல் பரிசாக வாங்கிக் கொடுத்தது தெரியவந்ததால் இரண்டு பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுவாதி கொடுத்த நகைகள் அனைத்தையும் புல்லட் காதலன், பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கடை கடையாக அடகு வைத்தது தெரியவந்ததையடுத்து முதற்கட்டமாக ஒரு கடையில் இருந்து 100 கிராம் நகைகளை மீட்டனர். அடகு கடைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்வதால் போலீசார் சுவாதியை அழைத்துக் கொண்டு அடகு கடைகளில் விசாரிப்பது சிரமம் என்பதை உணர்ந்து அவரை 2 வது நாள் முடிவிலேயே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் பைனான்ஸியர் சேகரிடம் பறித்த நகைகளை எப்படி சுவாதி , தனது இளம் காதலனுக்கு கொடுத்தாரோ, அதே போல அந்த புல்லட் காதலன், சுவாதியிடம் பெற்ற நகைகளை விற்று கிடைத்த பணத்தை வைத்து தனது இளம் காதலிகளான 3 பேரை பார்ட்டிக்கு அழைத்து செல்வது ஊர் சுற்றுவது என்று வாரி இறைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வட்டிக்கு வட்டி போட்டு வசூலித்த ரூ 30 லட்சம் ரூபாய் பணம் வகை தெரியாமல் போன நிலையில், அள்ளிச்சென்ற 550 சவரன் நகைகளையாவது மீட்க முடியுமா? என்று புல்லட் காதலன் கை நீட்டும் அடகு கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments