படகு என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவித்த 14 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்.!
டாமன்-டையூ யூனியன் பிரதேச கடற்கரையின் படகு பழுதாகி ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 14 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் டாமன் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகின் என்ஜின் பழுதாகி கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படையினர், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அழைத்து வந்தனர்.
Comments