இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்

0 2974
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்ததை அடுத்து கடந்த மாதம் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு சென்றார்.

அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்திற்கும் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில், வரும் 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதரும் ராஜபக்சேவின் உறவினருமான உதயங்க வீரதுங்கா தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments