பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.!
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கேசிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேச பெருமாள் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராகவன் அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பணத்தை பெறும் போது கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர்.
Comments