அ.தி.மு.க.வில் இனி இருதரப்பு என்பதே கிடையாது - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் இனி இருதரப்பு என்பதே கிடையாது என்றும், கட்சி எப்போதும் ஒரே இயக்கமாகவே செயல்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓ.பி.எஸ். மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், அ.தி.மு.க.வை யார் நினைத்தாலும் பிளவுப்படுத்த முடியாது என்றும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளித்து நடப்போம் என்றும் ஓ.பி.எஸ். குறிப்பிட்டார்.
Comments