தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

0 3074
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 19, 20, 21 ஆகிய நாட்களில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் 4 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments