அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கடந்த மாதம் 11ந் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ்., பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.
இருதரப்பு வாதங்கள் கடந்த வாரம் முடிந்தநிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
Comments