அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து.. இருவர் பலி..!
பொள்ளாச்சி அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலியானது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆழியாருக்கு சென்றுவிட்டு இரு இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அங்கலக்ககுறிச்சி பகுதியில் முன் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அவர்கள், அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பறந்து சென்று மோதினர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
Comments