மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பரிதவிப்பு.. தனித்தீவாக மாறிய 100க்கும் மேற்பட்ட கிராமங்கள்..!
ஒடிசாவில், மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாடா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன.
தொடர் மழையால் ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று, பைதரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கனி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
Comments