கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் - அமைச்சர் பொன்முடி

0 3094
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் - அமைச்சர் பொன்முடி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். வருகிற 20-ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதாகவும், 20 முதல் 23-ஆம் தேதி வரை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், சிறப்புப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

25 முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார். .

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments