உள்நாட்டில் தயாரான நிபுன் கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு

0 2149
உள்நாட்டில் தயாரான நிபுன் கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிபுன் கண்ணி வெடி உள்பட பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்திடம் வழங்கினார்.

கடந்த ஜூன் மாதம், 76 ஆயிரத்து 390 கோடி மதிப்பிலான உள்நாட்டில் தயாரிக்கப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி இன்று, நிபுன் கண்ணிவெடி, ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுத மற்றும் அமைப்புகளை இராணுவ பயன்பாட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வழங்கினார். சுமார் 7 லட்சம் நிபுன் கண்ணி வெடிகள் ராணுவ பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments