கண்டெய்னர் லாரியில் தேசியக் கொடி அச்சிட்டு 108 வகையான சீர்வரிசை வழங்கல்!

0 2828

தென்காசி மாவட்டம் மேலக் கடையநல்லூரில் கண்டெய்னர் லாரியில் தேசியக்கொடியை அச்சிட்டு 108 வகையான சீர்வரிசை வழங்கும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணிய பாண்டியன் - கோமதி தம்பதியினரின் மகள் ஹன்சிகாவுக்கு பூப்புனித நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக அவரது தாய்மாமன்கள் சார்பில் கடையநல்லூர் சொக்கம்பட்டி கிராமத்தில் இருந்து 108 வகையான சீர்வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்று 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கண்டெய்னர் லாரியில்  தேசியக்கொடியை  அச்சிட்டு அதன் மீது சீர்வரிசைகளை வரிசையாக அடுக்கி வைத்தனர். பின்னர் அதனை 100க்கும்  மேற்பட்ட வாகனங்களில் உறவினர்களோடு ஊர்வலமாக வாணவேடிக்கைகள் முழங்க கொண்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments