தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!
ஆன்மீக தீட்சை கொடுப்பதாக கூறி ஆசிரமம் நடத்தி வந்த அன்னபூரணி, தலையில் கிரீடம் சூட்டி, கையில் சூலம் ஏந்தி அம்மன் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அம்மனாக வேடமிட்டு சண்டே பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஆயிரம் சர்ச்சைகள் தன்னை சுற்றி வந்தாலும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் இராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து அசராமல் ஆசி வழங்கி வரும் அன்னபூரணியின் இந்த வார கெட்டப் ‘அம்மன்’ நாயகி ரம்யா கிருஷ்ணன் வேடம்..!
தலையில் ஜொலிக்கின்ற கிரீடம் சூடி, கையில் கனத்த சூலம் ஏந்தி மூச்சிரைக்க அன்னபூரணி ஆசிரம குடிலுக்குள் நின்றதை பார்த்தால் குலசை தசராதான் நினைவுக்கு வந்து போகிறது. அந்த அளவுக்கு அன்னபூரணிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றது இந்த கெட்டப் செட்கள்..!
இந்தியாவில் உள்ள 100 பக்தர்களுக்கும் அயல் நாட்டில் வாழும் 25 பக்தர்களுக்கும் தனது சக்தியை கடத்தி கடவுளை உணரச்செய்திருப்பதாக கூறிவரும் அன்னபூரணி, பக்தர்கள் சூட்டிய இந்த கிரீடம் தங்கம் இல்லை வெறும் செம்பினால் ஆனது என்று தெரிவித்தார்
கடவுளுக்கு உருவம் கிடையாது என்று தெரிவித்த அன்னபூரனி இந்த கிரீடத்தை பக்தர்கள் தன் மீது உள்ள நன்றி உணர்வால் தனக்கு போட்டு அழகு பார்த்ததாக ஒப்புக் கொண்டார்
இனி குணப்படுத்த இயலாது என்று மருத்துவரால் கைவிடப்பட்ட ஊர் பெயர் தெரியாத இருதய நோயாளியை சரியாயிடும் என்ற ஒற்றை வார்த்தையால் சரிசெய்ததாக தெரிவித்த அன்னபூரனி தன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்தால் என்ன நோயாக இருந்தாலும் சரிசெய்துவிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்
அதே நேரத்தில் மருத்துவம் படிக்காத ஒருவர் நோய்களை குணப்படுத்திவிடுவேன் என்று கூறுவது இந்திய மருத்துவ மருத்துவ விதிகளுக்கு எதிரானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments