ராஜஸ்தானில் 4.24லட்சம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிப்பு.... முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை 4லட்சத்து 24ஆயிரம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அசோக் கெலாட், மாநிலத்தின் 15 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி இருக்கிறது என்றார்.
இந்த நோயைத் தடுக்க தேவைப்பட்டால் டெண்டர் இல்லாமல் மருந்துகளை வாங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நோயால் இதுவரை 18ஆயிரத்து 462 கால்நடைகள் உயிரிழந்து விட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments