சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்தளித்தார்.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேநீர் விருந்திற்கு முன்பாக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆளுநர், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
Comments