சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
வாயு நிரப்பப்பட்ட பலூன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஆறாயிரம் அடி உயரத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, மூவர்ணக்கொடியை பறக்கவிட்டது.
'என்.எஸ்.எல்.வி. - பலூன்' எனப்படும் பலூன் செயற்கைக்கோள் மூலம் பூமிக்கு வெளியே தேசியக் கொடி பறந்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான ராஜா சாரி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அங்கிருந்த இந்திய தேசியக் கொடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Comments