75-வது சுதந்திர தினம்.. ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்..!

0 2571

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

இயமலை மீது உள்ள உலகின் உயரமான சியாச்சின் பனிமலையில் இந்திய வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிக்கரையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்

உத்தரகண்ட் மாநிலத்தில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

சிக்கிமில் கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் மலைப்பகுதியில் தேசியக்கொடியை ஏந்திச்சென்று சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ஐ.என்.எஸ் தரங்கிணி கப்பலில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள் ஐரோப்பா கடற்பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ஐ.என்.எஸ் தர்காஷ் கப்பலில் இந்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஐ.என்.எஸ் சுமேதா கப்பலில் தேசியக் கொடியை ஏற்றி இந்திய கடற்படை வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments