கஞ்சா போதையில் ஊர் மக்களை ஓட ஓட அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்.!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊர் மக்களை ஓட ஓட அரிவாளால் வெட்டிய 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இடையன்சாவடி மற்றும் ஈச்சங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இடையே ஏதோ ஒரு பிரச்னை காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஈச்சங்குழியைச் சேர்ந்த 4பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு இடையன்சாவடி கிராமத்தில் புகுந்து அங்கிருந்த சிலரை அரிவாளால் வெட்டி தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது.
மேலும் அந்த கும்பல் கஞ்சா போதையில் இருந்த தாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணலி புதுநகர் போலீசார் விரைந்து வந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Comments