நாட்டின் 75 வது சுதந்திர தினம் கோலாகலகமாக கொண்டாட்டம்.. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு.!
நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்துகிறார்.
டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இன்றைய உரையில் மருத்துவம் சுகாதாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி கொடியேற்றிய பிறகு இரண்டு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள், இரண்டு துருவ் ஹெலிகாப்டர்கள் செங்கோட்டையில் ரோஜா மலர் இதழ்களைத் தூவ உள்ளன. செங்கோட்டையை சுற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்புக்காக ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி பட்டங்களையோ, பலூன்களையோ, டிரோன்களையே யோரேனும் பறக்க விட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். டெல்லி காவல்துறை சார்பில் வாகன தணிக்கையும், ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. விடுதிகள், பார்வையாளர்கள் மாடங்கள், பார்க்கிங் ஏரியா ஆகியவற்றை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
Comments