சுதந்திர தினத்தையொட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு!
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.புராவில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவை சுமூகமாக கொண்டாட மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments