தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் - இபிஎஸ்

0 3328

தமிழகக் காவல்துறையைச் சுதந்திரமாகச் சட்டப்படி செயல்பட அனுமதித்துச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், சென்னையில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாகச் சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் செல்வதாகவும், குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments