மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் விநாயக் மேட்டே சாலை விபத்தில் மரணம்

0 3866

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் சிவ சங்க்ராம் கட்சித் தலைவருமான விநாயக் மேட்டே ராய்காட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மும்பை - புனே விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் கோர விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்த அவர் பன்வெல்லில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோரித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments