ம.பி., அணையில் ஏற்பட்ட விரிசல்.. முன்னெச்சரிக்கையாக தேசியப் பேரிடர் படைகள், ராணுவம் குவிப்பு

0 7426

மத்தியப் பிரதேச மாநிலம் டார் மாவட்டத்தில் 304 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

அணை உடைப்பு ஏற்பட்டால் பல ஊர்கள் மூழ்கக்கூடிய ஆபத்து இருப்பதால் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அணையைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்வரதன் சிங், இரண்டு இடங்களில் விரிசல் கண்டறியப்பட்டு, இரவோடு இரவாக ஒரு பகுதி சரி செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments