உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மருந்து விநியோகத்தை தடுத்த ரஷ்யா... உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம்சாட்டு

0 3777

உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுத்ததாக உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுத்ததன் மூலம் ரஷ்ய அதிகாரிகள் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை செய்ததாக தெரிவித்தார்.

தாக்குதலில் உயிரிழப்பவர்களை விட உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், இதனை போர்க்குற்றம் என்றும் லியாஷ்கோ விமர்சித்தார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார மையங்கள் மீது 445 முறை ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments