இலவசத் திட்டங்களை அறிவிக்கும் மாநில அரசுகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்
இலவசத் திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த பட்ஜெட்டையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவுறுத்தியுள்ளார்.
இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாக பிரதமர் மோடி எழுப்பிய பிரச்சினை நாடு தழுவிய விவாதமாக மாறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
மின்சாரம் உள்ளிட்டவைகளை இலவசம் என்று மாநில அரசுகள் அறிவிக்க தடையேதும் இல்லை என்று கூறிய அவர், தங்கள் மாநிலத்தின் நிதிநிலைமையையும் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Comments