சல்மான் ருஷ்டியின் மீது தாக்குதல் - ஜோ பைடன் கண்டனம்
சல்மான் ருஷ்டி மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்திருப்பதாக ஜோ பைடன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் நியுயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய வம்சாவளி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரால் இன்னும் சுயநினைவு பெற முடியவில்லை என்றும் பேச முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 15 இடங்களில் கத்திக்குத்து காயத்துடன் நேற்று சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு கண் பார்வையை இழக்க நேரிடலாம் என்றும் கல்லீரல் சேதம் அடைந்துள்ளது என்றும் செயற்கை சுவாசக்குழாய் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நியுஜெர்சி இளைஞர் ஹாதி மத்தர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்
Comments