பஞ்சாபில் ஒரே எம்எல்ஏ ஒரே ஓய்வூதியம் சட்டம் நடைமுறைக்கு வந்தது
பஞ்சாப்பில் ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற பின்பு இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும்.
இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த்மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவு சேமிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments