காவலர் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் முறைகேடு.. ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர், 3 பெண் காவலர்கள் கைது!

0 3949

தஞ்சையில் காவலர் பல்பொருள் அங்காடியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்து முறைகேடு செய்ததாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகில் செயல்படும் காவலர் நல பல்பொருள் அங்காடியில் ஆண்டு கணக்கு சரிபார்ப்பின் போது பொருட்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில், அங்கு பணிபுரியும் வீரம்மாள் என்ற பெண் காவலர் பொருட்களை தனது வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டு வெளிச்சந்தையில் விற்றதும் இதற்கு அங்கு பணிபுரியும் மற்ற காவலர்கள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.

இதையடுத்து ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் வீராசாமி, பெண் காவலர்கள் வீரம்மாள், கோகிலாவாணி, வளர்மதி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments