கூகுள் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்!
பயனர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சேகரித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை சில பயனர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் தனிப்பட்ட இருப்பிடத் தரவை சேகரித்ததாகவும், சில பயனர்கள் இருப்பிட பதிவை பகிர விருப்பம் தெரிவிக்காத நிலையில், வேறு சில செயலிகள் உதவியுடன் கண்காணித்ததாகவும் கூகுள் மீது ஆஸ்திரேலிய வர்த்தகப்போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் புகார் அளித்தது.
Comments