தேசப்பக்தி உள்ளவர்கள் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவார்கள் - எல்.முருகன்

0 3172

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் தேசியக்கொடியை ஏந்தியபடி பங்கேற்ற இந்த சுதந்திர ஓட்டம் 7.2 கிலோ மீட்டர் தூரம் வரை நடைப்பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவு 2047 ஆம் ஆண்டிற்குள் நிறைவேறும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments