நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்... வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, பேரணியில் பங்கேற்ற தலைவர்கள்
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றியும், பேரணியாக சென்றும் மரியாதை செய்தனர்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் அனைத்து இந்திய குடிமக்களும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மனைவியுடன் இணைந்து தேசியக்கொடியை ஏற்றினார்.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்றார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் Har Ghar Tiranga பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார்.
உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சம்பாவத்தில் உள்ள மாயாவதி ஆசிரம வளாகத்தில் மூவர்ணக்கொடியை ஏந்திச் சென்றார்.
கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ஹரோஹல்லியில் Har Ghar Tiranga பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
மலையாள நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் பேசிய அவர், பிரதமரின் அழைப்புக்கு மதிப்பளித்து குடிமக்களுடன் இணைந்து தேசியக்கொடியை ஏற்றியதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் எஸ்.பி.ஐ தலைவர் தினேஷ் காரா தேசியக்கொடியுடன் சைக்கிளில் பேரணியாக சென்றார்.
Comments