75வது சுதந்திர தினத்தையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த நாசா.!

0 3520

75வது சுதந்திர தினத்தையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி  வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில், அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்காக இஸ்ரோவுடன் ஒருங்கிணைந்து நாசா செயல்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments