அம்பத்தூர் எஸ்டேட்டில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் போலி பணியாளர்களை உருவாக்கி ரூ.6 கோடி மோசடி
சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட்டில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் போலி பணியாளர்களை நியமித்து 6 கோடி ரூபாய் மோசடி செய்த 6பேர் கைது செய்யப்பட்டனர்.
வாப்கோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியான கோபிநாத் என்பவர் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் அளித்த புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாரணையில் அந்த 6பேரும் 129 போலி பணியாளர்களை உருவாக்கி தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி சுமார் 6 கோடியே 95 லட்சம் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
Comments