பட்டா மாற்றம் செய்து தர ரூ.20ஆயிரம் லஞ்சம் - ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் கைது..!

0 3038

அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்த சச்சினாந்தம் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்காக ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments