லுங்கி அணிந்துக் கொண்டு புகார் கொடுக்க வந்த நபருக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி மறுப்பு!

0 3770

ஜெய் பீம் பட கதாபாத்திரத்தின் உண்மை நபரான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் லுங்கி அணிந்துக் கொண்டு புகார் கொடுக்க வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.

கொளஞ்சியப்பனின் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்தே ஜெய்பீம் திரைப்படம் உருவானதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக கொளஞ்சியப்பனிடம் பட நிறுவனம் அனுமதி பெறாததால், வழக்கு தொடரப்பட்டது.

இதில் நீதிமன்ற உத்தரவிட்ட போதிலும் சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவதில் தாமதப்படுத்துவதாகவும், இதனால் போராட்டம் நடத்த அனுமதி கோரியும், கொளஞ்சியப்பன் லுங்கி அணிந்துக் கொண்டு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஆனால், லுங்கி உடையுடன் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வேட்டி அணிய வைத்து பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments