நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் சீன அரசு நிறுவனங்கள்!
சீன அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்கள் அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தைப் பட்டியலில் இருந்து வெளியேறி முடிவு செய்துள்ளன.
சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக், பெட்ரோ சீனா, அலுமினியம் கார்ப்பரேசன் ஆப் சீனா ஆகியன தாங்களாகவே நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
சீன நிறுவனங்களின் கணக்குத் தணிக்கை தொடர்பாக நெடுங்காலமாக நீடிக்கும் தகராறைத் தீர்க்கப் பேச்சுக்களும் நடைபெற்று வருகின்றன.
தணிக்கை விதிகளுக்குச் சீன அரசு நிறுவனங்கள் இணங்காவிட்டால் அவை பங்குச்சந்தைகளை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Comments