சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ ஜே யாங்கிற்கு தென்கொரிய அதிபர் மன்னிப்பு!
தென்கொரியாவில் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட மிகப்பெரிய மோசடி புகார்களில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்த சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ ஜே யாங்கிற்கு அந்நாட்டின் தற்போதைய அதிபர் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
உலகில் ஸ்மார்ட் போன் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் சாம்சங், தென்கொரியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கிறது.
இந்நிறுவனத்தின் துணைத்தலைவரான லீ ஜே யாங் மிகப்பெரிய மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். 36 மாத சிறைதண்டனையில் 18 மாத சிறைவாசத்திற்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உலகளாவிய பொருளாதார மந்த நிலையை சமாளிக்கும் வகையிலும், தென்கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கும் வகையிலும், சாம்சங் நிறுவன தலைவருக்கு தென் கொரிய அதிபர் மன்னிப்பு வழங்கியுள்ளதாக அந்நாட்டு சட்ட அமைச்சர் ஹான் டாங் ஹுன் தெரிவித்துள்ளார்.
Comments