பிரசவத்தின்போது குழந்தையின் கால் முறிந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு.. மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தையின் கால் முறிந்ததாக குற்றம்சாட்டியுள்ள பெற்றோர், அதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 7ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆடுர் பகுதியை சேர்ந்த அருள்மொழிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தையின் இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்களிடம் கேட்டால் குழந்தை அமர்ந்திருந்த நிலையில் இருந்ததால் இதுபோன்று எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என அலட்சியமாக பதில் கூறியதாகவும் குழந்தையின் தந்தை குற்றம்சாட்டினார்.
Comments