ரோலெக்ஸ் ஆக நினைத்து லாக்கப் போன போட்டோ ரவுடிஸ்..!

0 5710

விக்ரம் திரைப்பட ரோலக்ஸ் போல நிஜ போலீஸ் வாகனத்தை வைத்து போல ரீல்ஸ் எடுத்த போட்டோ ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் CISF படை போலீசார் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளனர்.

இவர்களை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் நவீன் குமார் என்பவர் காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று உயர்நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு மீண்டும் துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு வளாகத்தில் காவல் வாகனத்தை நிறுத்தி செல்வது வழக்கம்

இப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் 4 இளைஞர்கள் ரவுடி போன்று வேடமணிந்து வாகனத்தில் இருந்து புழுதி பறக்க இறங்கி வருவது போன்று ரீல்ஸ் செய்துள்ளனர்.

அதோடில்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய வார்ப்பு பகுதியில் விக்ரம் பட வில்லன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான ரவுடி சந்தானம் போலவும், சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திலும் கையில் கைத்தியுடன் ரத்தம் சொட்டும் வகையில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

இதற்க்கிடையே தான் நிறுத்திச்சென்ற காவல் வாகனத்தில் ஏறி சட்டவிரோதமாக வீடியோ எடுக்கப்பட்டதாக ஓட்டுநர் நவீன் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

Sanju pa official என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்

இதனை அடுத்து புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவரையும் , மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சஞ்சய் என்பவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments