டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்தப்போவதாக ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு
ஆயிரக்கணக்கான வழக்குகள் காரணமாக டால்கம் பேபி பவுடர் விற்பனையை உலக அளவில் நிறுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டால்கம் பேபி பவுடரில் உள்ள கனிமங்களால் புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்து 300 வழக்குகள் தொடுக்கப்பட்டதால், அமெரிக்காவிலும் கனடாவிலும் டால்கம் பேபி பவுடர் விற்பனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது.
2023ஆம் ஆண்டில் உலக அளவில் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தப் போவதாக இப்போது அறிவித்துள்ளது. பவுடரில் கனிமப் பொருட்களுக்குப் பதில் சோளமாவைப் பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. வழக்குத் தொடுத்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 200 கோடி டாலர்களையும் ஒதுக்கியுள்ளது.
Comments