சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சி: 1 மில்லியன் சோமாலியர்கள் இடம்பெயர்ந்ததாக ஐ.நா சபை அறிவிப்பு

0 7258

சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் கடும் வறட்சி, கடந்த ஆண்டு மோசமானதை அடுத்து, சுமார் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 59 லட்சம் மக்கள் தொகை கொண்ட சோமாலியாவில், நடப்பாண்டில் மட்டும் சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் தண்ணீரைத் தேடி வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் சோமாலியா நாட்டில் பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் ஐ.நா.அகதிகளுக்கான முகமை கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments