முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு... 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை !

0 9301

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுகவைச் சேர்ந்த கே.பி.பி பாஸ்கர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021 வரையில் நாமக்கல் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அவரது வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் நாமக்கல் அசோக் நகரில் உள்ள கே.பி.பி.பாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை கே.கே நகரில் கே.பி.பி பாஸ்கரின் நண்பருக்கு சொந்தமான ஆர்.ஆர் இன்பிரா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்திலும் திருப்பூரில் பாஸ்கரின் உறவினரான ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments