யாரைக் கேட்கிறாய் சுங்கக் கட்டணம்..? காரோடு இழுத்துச் சென்ற ஓட்டுனர்..! கில்லி படம் போல நிஜ சம்பவம்..!
சுங்கச்சாவடி ஒன்றில் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்த வாகன ஓட்டி ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதோடு, அவரது சட்டையை பிடித்து காரோடு சேர்த்து இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுங்க கட்டண உயர்வு..! நிர்ணயித்த காலத்துக்கு பின்னரும் கணக்கு வழக்கில்லாமல் சுங்கம் வசூலிக்கும் சாவடிகள்..! பாஸ்டெக் இல்லையென்றால் இரு மடங்கு கட்டணம்..! பாஸ்டேக் இருந்தாலும் நீண் டவரிசையில் காத்திருக்கும் அவலம் போன்ற வற்றால் சுங்கச்சாவடி மீது வாகன ஓட்டிகளுக்கு ஒரு வித வெறுப்புணர்வு மேலோங்கி வருகின்றது.
இதன் காரணமாக அவ்வபோது கோவில் மணியை அடிப்பது போல தனி நபரோ, கும்பலோ சுங்கச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் புறவழிச்சாலையில் உள்ள காவ நாடு சுங்கச்சாவடிக்கு காரில் சென்றவர்கள் , சுங்க கட்டணம் செலுத்த மறுத்து சுங்கசாவடி ஊழியரான அருண் என்பவரை தாக்கி உள்ளனர்.
காருக்கு அருகில் சென்று சுங்க கட்டணத்தை வசூலிப்பதில் முனைப்பு காட்டி உள்ளார் ஊழியர் அருண். அப்போது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜை கழுத்தில் துண்டை போட்டு காருடன் விஜய் இழுத்துச்செல்வது போல அருணின் சட்டையை பிடித்து இழுத்துச்சென்று சாலையில் தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காரின் எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நல்ல தரமான சாலைகள் வேண்டும் அதற்காக சுங்க கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை.
அதே நேரத்தில் இந்தியா முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றகோரி பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தாலும் , விதியை மீறி மாநகரப் பகுதிகளுக்குள்ளே புதிதாக சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.
Comments