வங்கி ஊழியர்களை பணையக்கைதிகளாக சிறைவைத்த நபர்.. வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள பணத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தல்..!
லெபனான் நாட்டில், துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த நபர் தனது வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள 2 லட்சம் அமெரிக்க டாலர்களை விடுவிக்க கோரி ஊழியர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
லெபனான் அரசு கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தந்தையின் மருத்துவச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பெய்ரூட்டில் உள்ள பெடரல் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், தனது பணத்தை கேட்டு 7 வங்கி ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.
அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ராணுவத்தினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Comments