டீ மாஸ்டரை தாக்கி, சிகரெட் புகையை முகத்தில் ஊதி அட்டூழியம்.. 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது..!
சேலம் தாதகாப்பட்டியில், பணம் கேட்டு டீ மாஸ்டரை தாக்கிய வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடியையும் போலீசார் கைது செய்தனர்.
வில்லு கடை பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வரும் அப்துல் சுப்புவிடம், 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் கேட்டுள்ளனர்.
சிகரெட் இல்லை என அவர் கூறியதையடுத்து, டீ மாஸ்டர் முகத்தில் புகையை ஊதிய ரவுடி, பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து டீ மாஸ்டரை கண்ணாடி ஜாடியை கொண்டு தாக்கிய கும்பல், கடையை சூறையாடியது.
Comments