வறட்சியால் மலைப்பகுதிகளில் வசிக்கும் கால்நடைகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர் எடுத்துவரும் பணிகள் தீவிரம்
சுவிட்சர்லாந்தில் நிலவும் வறட்சியால் மலைப்பகுதிகளில் வசிக்கும் கால்நடைகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.
பருவமழை பொய்த்ததால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உள்ள நீர்தேக்கங்கள் வறண்டும், புல்வெளிகள் காய்ந்தும் காணப்படுகின்றன. அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அழைத்து வந்தால் அடுத்து குளிர் காலத்தில் தீவனத்தட்டுப்பாடுக்கு வழிவக்கும் என்பதால் விவசாயிகள் ராணுவத்தின் உதவியை நாடினர்.
இதையடுத்து 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு நீர்தேக்கங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Comments