கோத்தபய ராஜ்பக்சேவுக்கு தற்காலிகமாக அடைக்கலம் தந்தது தாய்லாந்து அரசு

0 1826
கோத்தபய ராஜ்பக்சேவுக்கு தற்காலிகமாக அடைக்கலம் தந்தது தாய்லாந்து அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவர் கடந்த மாதம் 13-ந் தேதி விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

அவரது சிங்கப்பூர் விசா இன்றுடன் நிறைவடைவதால் தாய்லாந்து அரசிடம் அடைக்கலம் கோரினார். அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து அரசு, அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ளவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments