ஒடிசாவில் 74 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல்

0 1390
ஒடிசாவில் 74 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல்

ஒடிசாவில் 74 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் 24 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தின் உருக்கு மற்றும் உரம் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது. அதானி குழுமம் 41,653 கோடி ரூபாயும், டாடா ஸ்டீல் 1000 கோடி ரூபாயும், ஒடிசா அலாய் ஸ்டீல் நிறுவனம் 8000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments