இலவசப் பொருட்கள் பற்றி வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது தீவிர விவகாரமாகும் - உச்சநீதிமன்றம்
அரசியல் கட்சிகள் தேர்தலின்போது இலவசப் பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது என்பது தீவிர விவகாரம் என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், உட்கட்டமைப்பு போன்றவைக்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலின்போது கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், இலவச அறிவிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, இலவசங்களும், சமூக நிலத் திட்டங்களும் வெவ்வேறானவை என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.
மேலும், இதில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும், தாங்கள் ஏதும் செய்ய இயலாது என கூற முடியாது என்றும், இவ்விவகாரத்தை பரிசீலித்து பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Comments