கடல் சீற்றத்தில் நான்கு பைபர் படகுகள் சிக்கி கவிழ்ந்து விபத்து - மீனவர் உயிரிழப்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கி, 4 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.
இதனை கண்டித்து பூத்துறை மீனவ கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் குவிந்துள்ள மணல் மேடுகளால், கடல் சீற்றத்தின் போது, படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயமடைவது வாடிக்கையாக உள்ளது.
Comments